மன்மோகனுக்கு கைவிரித்த திமுக: காங்., அதிர்ச்சி

1 year ago

Tamil_News_large_2310275

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2 பேரை அறிவித்ததின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 'சீட்' இல்லை என்று திமுக வைவிரித்து விட்டதாகவே அரசியல் அரங்கில் பபரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூலை 18 ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்ய முடியும். 
அந்த அடிப்படையில் திமுக 3 வேட்பாளர்கள் குறித்தும் இன்று அறிவித்துவிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கிற்கு சீட் வழங்க மறுத்துவிட்டது தெரிகிறது.

ஏனெனில், கடந்த ஜூன் 13 ல் தான் முதன்முதலாக 28 வருடங்களுக்கு பின்னர், மன்மோகன்சிங் முன்னாள் ராஜ்யசபா எம்.பி., லிஸ்டில் வைக்கப்பட்டார். ஏற்கனவே அசாமில் இருந்து எம்.பி.,யாக அவர் தேர்வான நிலையில், தற்போது அங்கு காங்கிரசிற்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 20 ல், மன்மோகனுக்கு சீட் ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால், ராஜ்யசபாவில் தற்போதைய நிலையில், காங்கிரசிற்கு 48 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், தி.மு.க.,விற்கு வெறும் 3 பேர் மட்டுமே உள்ளனர். எனவே தான், மன்மோகனுக்கு கைவிரித்துவிட்டு 2 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், 1991 முதல் நிதியமைச்சர், 10 ஆண்டுகள் பிரதமர், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவர் என்று பதவி வகித்த மன்மோகனுக்கு, காங்கிரசின் பாரம்பரிய கூட்டாளியான தி.மு.க., மறுத்துள்ளது, புதுடில்லி வட்டாரங்களில் பரபரப்பாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

சமீபத்திய செய்திகள்