சஜித் பிரேமதாச தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்பதே பலரின் நிலைப்பாடு !

6 months ago

hirunika

ஐக்கிய தேசியக் கட்சி புதியத் தலைமைத்துவத்துடன் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதையே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்பதே பலரின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சு நடத்தி, விரைவில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வொன்று முன்வைக்கப்படும்.

பெரும்பான்மையினர் மாற்றமொன்று ஏற்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். மாற்றமில்லாமல் பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாது என இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெரும்பாலும், சஜித் பிரேமதாசவைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். அத்தோடு, சபாநாயகர் கருஜயசூரிய தொடர்பாகவும் சிலர் கருத்து வெளியிட்டார்கள்.

இன்னும் சிலர் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் என்ற விரும்பத்தை வெளியிட்டுள்ளார்கள்.

எவ்வாறாயினும், கட்சியில் மாற்றமொன்றை மேற்கொண்டு புதிய தலைமைத்துவத்துடன் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் அனைவரதும் நிலைப்பாடாக இருக்கிறது

சஜித் பிரேமதா4 தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளை வைத்துப் பார்க்கும்போது அதுதான் சரியான முடிவாகவும் அமையும்” என மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்