ரோகித் அரை சதம் விளாசல்: இந்திய அணி அசத்தல் வெற்றி

6 months ago

Tamil_News_large_2406375

 

 வங்கதேச அணிக்கு இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் ரோகித் அரை சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஏமாற்றிய இந்தியா 0-1 என தொடரில் பின் தங்கி இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்தது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் 29, முகமது நயீம் 36 ரன்கள் எடுத்தனர். முஷ்பிகுர் (4) அணியை கைவிட்டார். சவுமியா சர்கார், மகமதுல்லா தலா 30 ரன்கள் விளாசினர். வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. மொசதெக் (7), அமினுல் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அபார துவக்கம் தந்தது. எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் அரை சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தபோது, தவான் (31) ஆட்டமிழந்தார். ரோகித் 85 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் கைகொடுக்க, இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (24), லோகேஷ் ராகுல் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 10ம் தேதி நாக்பூரில் நடக்கவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்