நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி! பலர் மாயம்.. மீட்பு பணியில் ராணுவம்

9 months ago

volcano34343-1575887441

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஒரு தீவில் எரிமலை வெடித்ததில், ஐந்து பேர் இறந்தனர் .அந்த தீவில் இன்னும் எத்தனை பேர் மாயம் ஆனார்கள் என்பது குறித்து முழுமையாக கணக்கிப்படவில்லை என்றும், முழு விவரம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வகாரி என்று அழைக்கப்படும் வெள்ளை தீவு, நியூசிலாந்து நாட்டின் மிகச் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். தனியாருக்குச் சொந்தமான இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த தீவினை கடந்துதான் ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் செல்லும்.

இந்நிலையில் வெள்ளை தீவில் எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் வெள்ளை தீவு எரிமலையின் பள்ளத்திற்குள் நடந்து செல்வதைக் காண முடிந்தது.

அங்கு இதுவரை எரிமலை வெடித்து 5 பேர் பேர் இறந்து போனதாகவும். 23 பேர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் எரிமலை வெடிப்பு குறித்த விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் மீட்பு பணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நியூலாந்து இராணுவம் போலீசாருக்கு உதவியாக மீட்பு பணியில் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷ்னர் ஜான் டிம்ஸ்,கூறுகையில், எத்தனை பேர் அங்கே இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் "நியூசிலாந்து மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார். தீவில் 50 க்கும் குறைவானவர்கள் இருப்பதாக போலீசார் முன்பு கூறியிருந்தனர். இறந்த ஐந்து பேரும் தீவில் இருந்து மீட்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இதனிடையே எரிமலை வெடித்து சிதறிய வெள்ளைத்தீவில் புகைமூட்டங்கள் விண்ணை முட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. வெள்ளைத்தீவு முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
 

சமீபத்திய செய்திகள்