முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கண்ணீருடன் இன்று 11 ஆண்டுகள் !

1 week ago

may 18 2020

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்பு நாளான மே 18 (இன்று), இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில்  உணர்வு பூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வின்போது  பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் .மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது 

அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கையானது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் வெளியிட்டப்பட்டது.
 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடாகவோ  இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசங்கள் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் வெளியில்தான், தமிழர்களுக்கான தீர்வும் சாத்தியமாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த  அறிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது
 


இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
 

may piragadanam

சமீபத்திய செய்திகள்