மத்திய அரசு முயற்சியால் 27 குற்றவாளிகள் நாடு கடத்தல்

1 year ago

Tamil_News_large_2322273

'மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், கடந்த, 2016ல் இருந்து, 27 குற்றவாளிகள், வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர்; 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் விடுத்துள்ள,'நோட்டீஸ்' மூலம், 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை இணையமைச்சர், ஜி.கிஷண் ரெட்டி கூறியுள்ளதாவது:வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள, நம் நாடால் தேடப்படும் குற்ற வாளிகளை பிடிப்பதற்கு, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசின் உதவியை நாடுகிறோம்.

அந்த அமைப்பு, 'ரெட் கார்னர்' என்ற நோட்டீஸ் பிறப்பிக்கும். அதன்படி, தேடப்படும் குற்றவாளி எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டு போலீஸ் அவர்களை கைது செய்யும்.இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள், அந்தந்த நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி, நாடு கடத்தப்படுவர்.கடந்த, 2016 முதல், இந்தாண்டு, ஏப்., 1 வரையிலான காலத்தில், 27 தேடப்படும் குற்றவாளிகள், பல்வேறு நாடுகளில் இருந்து நாடு கடத்தி, இந்தியா வரப்பட்டுள்ளனர்.இன்டர்போல் நோட்டீஸ் மூலம், 2016ல் இருந்து இந்தாண்டு ஏப்., 1 வரை, 111 பேர் , பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு தற்போது, அசாமில் மட்டுமே நடக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்தக் கணக்கெடுப்பு நடக்கிறது.நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், வெளிநாட்டைச் சேர்ந்த அகதிகள் வசிக்கின்றனரா என, ஆராயப்படும். சர்வதேச விதிகளின்படி, அவர்கள் நாடு கடத்தப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

 

கணக்கெடுப்பு

சமீபத்திய செய்திகள்