ஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

1 month ago

Tamil_News_large_2460010

இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், இன்று(ஜன.,17) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : 2020 ம் ஆண்டின் முதல் செயற்கை கோள் ஏவிய இஸ்ரோ அமைப்பிற்கு வாழ்த்துக்கள் . 'ஜிசாட் - 30' அதன் அதன் தனித்துவமான உள்ளமைவுடன் டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், ஏடிஎம்களுக்கான இணைப்பு, பங்குச் சந்தைகள் மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றை வழங்கும் என தெரிவித்து உள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகள்