ஜூன் 30வரை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முடக்கம் !

1 week ago

antoneo guteres

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தொடர்ந்தும்  மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள குறித்த தலைமை அலுவலகம், கடந்த மார்ச் 16ஆம் திகதி மூடப்பட்டு பின்னர் ஏப்ரல் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 

அதன் பின்னர் மே 31ஆம் வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் தொற்று வீதம் குறையாமையால்,  ஜூன் 30 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.,பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘முழு உலகமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் வெறுப்பை காட்டும் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், தகவல்கள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது. பயங்கரவாத மற்றும் நிறவெறி அமைப்புகள், இந்த வைரஸ்  நிலைமையை தமக்கு சாதகமாக்கி  மக்களிடம் ஒற்றுமை உணர்வை அழிக்க முயற்சிக்கின்றன. இதை தடுக்கும்  பொறுப்பை  மதத்  தலைவர்கள் கைக்கொண்டு மக்களிடையே  ஒற்றுமையை அதிகரித்து, வைரசை  ஒழிக்கும் பணியை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்