நக்சலிசத்தின் முதுகெலும்பை பா.ஜ., உடைத்துள்ளது: மோடி

7 months ago

Tamil_News_large_2425580

 பா.ஜ., ஆட்சியில் நக்சலிசத்தின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 20 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஹூண்டி பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜார்க்கண்ட்டில் நடந்த முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிவில் 3 விஷயங்கள் தெளிவாகின்றன. முதலாவது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஜார்கண்ட் மக்களின் நம்பிக்கையும், முன் எப்போதும் இல்லாத வகையில், நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் தெரிகிறது.

இரண்டாவதாக, பா.ஜ., ஆட்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களின் முதுகெலும்புகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், இங்கு அச்சப்படும் சூழல்கள் குறைந்து வளர்ச்சிக்கான சூழல் உருவாகி உள்ளது. மூன்றாவதாக, ஜார்கண்ட் மக்களுக்கு, பா.ஜ., மற்றும் தாமரை சின்னம் மீது நம்பிக்கை உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்னை, அயோத்தி விவகாரத்தில் முந்தைய காங்., அரசு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ., ஆட்சியில் இதற்கு சுமூக தீர்வு எட்டப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்