முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் - தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை

4 months ago

may 18 remem

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் இன்று(திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும்  நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த கட்சியின்  சிரேஷ்ட துணைத் தலைவர் ச.அரவிந்தனால் குறித்த  அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில், “இன்று தமிழ் மக்களின்  ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை பலி கொண்டு 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த  துன்பகரமான நாளை தமிழ் மக்கள் நினைவுகூறுமுகமாக  இன்று மாலை 6-7 மணியளவில் தத்தம் வீடுகளில் அமைதியான முறையில்  தீபம் ஏற்றி அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வதோடு தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்திப்பயணிக்க  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அனைத்து தமிழ் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்