ஆடை எதுவுமற்ற நிலையில் சிறுமி நோரா குய்ரின் சடலம் !

4 months ago

nora

லண்டனைச் சேர்ந்த சிறுமி நோரா குய்ரின் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டுசன் விடுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் மலைப்பாங்கான தோட்டப் பகுதியில் ஒரு ஓடையின் அருகே சிறுமி நோரா குய்ரின் உடல் ஆடை எதுவுமற்ற நிலையில் காணப்பட்டதாக பிபிசி நிருபர் ஹாவேர்ட் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

15 வயதான சிறப்புத் தேவைகளைக் கொண்டிருந்த நோரா குய்ரின் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு மலேசியாவுக்குச் சென்றபோது கடந்த 4 ஆம் திகதி காலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.

நோரா காணாமல்போன செய்தியறிந்த மலேசிய அரசாங்கம் சிறுமியைக் கண்டுபிடிக்க சுமார் 350 பேர் அடங்கிய பொலிஸாரைக் களத்தில் இறக்கித் தேடுதலை நடத்தியிருந்தது.

இன்று செவ்வாய்க்கிழமை தேடுதல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தங்கள் மகள் என்பதை பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை நாளை புதன்கிழமை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த பொலிஸார் அதன் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரிவரும் என்று கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்