ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10'ல் ராகுல், கோஹ்லி, ரோகித்

9 months ago

Tamil_News_large_243229620191212214739

ஐ.சி.சி., 'டுவென்டி-20' பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் (6வது இடம்), கேப்டன் விராத் கோஹ்லி (10வது இடம்) முன்னேற்றம் கண்டனர்.

சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 9வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த விண்டீசுக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் 91 ரன் விளாசிய இவர், ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 15வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். விண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் 183 ரன்கள் குவித்த இவர், தொடர் நாயகன் விருது வென்றார்.

மற்றொரு இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா, 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். விண்டீசுக்கு எதிராக 3 போட்டியில் 94 ரன் மட்டுமே எடுத்த இவர், சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் 400 சிக்சர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் கோஹ்லி, ரோகித் சர்மா தலா 2633 ரன்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகள்