இரவோடு இரவாக பாகிஸ்தான் செய்த காரியம்.. இந்தியாவிற்கு எதிராக முக்கிய அஸ்திரத்தை எடுத்தது!

4 months ago

shah-mehmood-qureshi-1543134054-1551349733-1565318519

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று இரவோடு இரவாக சீனாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருக்கிறார். காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதையடுத்து இந்தியாவுடன் அனைத்து விதமான உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேபோல் இதில் தீவிரமான ராஜாங்க நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது.
இந்த காஷ்மீர் விஷயத்தில் சீனா இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கியமான ஒரு நாடாக இருக்கும் சீனா இதில் அமைதி காத்துக் கொண்டு இருந்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் சீனா, இந்த காஷ்மீர் பிரிப்பு குறித்து எதுவுமே சொல்லவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று இரவோடு இரவாக சீனாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருக்கிறார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதியை சந்தித்தார்.

நேற்று இரவே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீனாவின் தலைவர்களுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து ஆலோசித்தார். இன்றும் காஷ்மீர் குறித்து இவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். சீனாவின் லடாக் எல்லைக்கும் இவர்கள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடும் என்று எல்லோரும் கணித்தனர். தற்போது அவர்களின் கணிப்புப்படியே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீனா சென்றுள்ளார். இதனால் சீனா காஷ்மீர் பிரச்சனை குறித்து முக்கிய கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது.


 

சமீபத்திய செய்திகள்