அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு -இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

1 week ago

Sri-Lanka-Election-Commission-office

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட நேரத்தில் இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 35 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உட்பட 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்