அகதிகளுக்கு நில உரிமை: மம்தா முடிவு

6 months ago

Tamil_News_large_2419545

'என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஹிந்துக்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும், மத்திய அரசு அகதிகளாக ஏற்கும். அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படும்.மதத்தின் அடிப்படையில், யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்,'' என, ராஜ்ய சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

இந்நிலையில் மேற்குவங்க திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மம்தா கூறியது, மாநில அரசு நிலத்தில் இருந்த 94 அகதிகள் காலனிகளை மாநில அரசு ஏற்கனவே முறைப்படுத்தியுள்ளது.. மேலும் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு மாநில அரசாங்கத்தால் நில உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் அதிகள் தங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் மத்திய அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் அகதிகளுக்கே சொந்தமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

 

 

 

சமீபத்திய செய்திகள்