கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கு 60 வயது !

11 months ago

kamal 60

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத் தன்மைக்கொண்ட கமல்ஹாசன் சினிமா துறையில் கால்பதித்து இன்றுடன் (திங்கட்கிழமை) 60 ஆண்டுகள் ஆகின்றது.

1960ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது இவரது சினிமா வாழ்க்கை.

இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதிவிருது பெற்ற இவர், 1975 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் தான் முதன் முதாலாக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.  இதில் தன்னை விட வயது கூடிய ஒரு பெண்ணைக் காதல் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலு மகேந்திரனின் திரைப்படத்திலும், 1987ஆம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

படிப்படியாக நடிப்பு துறையில் தன்னை வளரத்துக்கொண்ட இவர், 1996 இல் சங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுபவராக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதன்பின்பு வெளியான ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய திரைப்படங்களை இவரே தயாரித்து நடித்து தனிச்சிறப்பு பெற்றார்.

இவ்வாறு நடிப்பு மட்டுமன்ற தயாரிப்பு துறையிலும் கால்பதித்த இவரின் திறமைகளை பாராட்டி   1979 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கி தமிழ் நாட்டு அரசு  கௌரவித்தது .

இவ்வாறாக பத்மசிறீ, பத்ம பூசண், என பல விருதுகளை தன்வசப்படுத்திய கமல்ஹாசன், இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்