பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர்

11 months ago

Tamil_News_large_2358777

பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு பார்லி.,யில் பெரும்பான்மையை இழந்தார்.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (செப்.,3) அந்நாட்டு பார்லி.,யில் நடைபெற்று வந்தநிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., பிலிப் லீ, எதிர்கட்சி எம்.பி.,க்களின் வரிசையில் அமர்ந்தார். பிலிப் லீ எதிர்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்ததையடுத்து, போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.

சமீபத்திய செய்திகள்