உலக பயங்கரவாத்தின் மையம் பாக்., : இந்தியா குற்றச்சாட்டு

5 months ago

Tamil_News_large_2363990

உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது' என ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியது.
காஷ்மீர் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் தாக்குர் சிங் பேசியதாவது: சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின், நாட்டின் அனைத்து நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது. சிறார் உரிமை பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மேம்படும்.

இந்தியாவைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஒரு குழு, மோசமான சொற்களையும் பயன்படுத்தி உள்ளது. இந்த கட்டுக்கதையை, பயங்கரவாதிகளின் புகழிடமாக விளங்கும் பாகிஸ்தான் தான் கிளப்பியது என உலக நாடுகள் அறியும். இதற்காக பிரிவினைவாதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. உலக பயங்கரவாதத்தின் மையமாக பாக்., விளங்குகிறது.

பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட பிற சட்டங்களை போலவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்திய குடிமக்கள் தொடர்பான பதிவுகளை உள்ளடக்கிய, தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி (என்.ஆர்.சி.,) எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், இந்திய சட்டத்திற்கு இணங்குவதோடு, எங்கள் ஜனநாயக மரபுகளுடன் ஒத்துப்போகும். இவ்வாறு அவர் பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்