ஜப்பான் குழந்தை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

1 month ago

japan kid face mask

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  முகக்கவசம் அணிவிக்கக்கூடாது என ஜப்பான் குழந்தை சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, முகக்கவசம் அணிவதை ஒவ்வொரு நாடுகளும் கட்டாயப்படுத்திவரும்  நிலையில் இந்த எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது குழந்தைகளுக்கு  மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான் குழந்தை சங்கம் தனது உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

"முகக்கவசங்கள் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன. இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது.முகக்கவசங்கள் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது"
 

சமீபத்திய செய்திகள்