வங்க மாநில நிவாரண பணிகளுக்காக 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு !

4 days ago

MODI

அம்பன் புயல் காரணமாக அதிகளவு சேதங்களை எதிர்நோக்கியுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த புயலின் தாக்கத்தினால் மேற்குவங்க மாநிலம் இதுவரை காணாத அளவுக்கு அழிவுகளை சந்தித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். புயல் சேதங்களை நேரில் பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து  முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மேற்படி அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில்,  “மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை விரிவாக ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வந்து ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிடும். மாநிலத்தில் கட்டமைப்புகளை சீர் செய்ய அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவும்.

மேற்கு வங்க மாநிலத்தில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு தரப்பில் 1000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தரப்பில் தலா 2 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்” என  அறிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்