இலங்கையின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் ஆரம்பம் ?

1 week ago

sl tourism

இலங்கையின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை  ஜூலை மாத ஆரம்பத்தில் மீள மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதிக்கமையவே  இதற்கான சாத்தியமுள்ளதாக இலனாகி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், "கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில்  ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்க முடியும்" என அவர்  தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக வருவோர் உட்பட நீண்டகால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்  சுற்றுலா பயணிகளின் வருகைக்கு முன்னரும்  பின்னரூம்  கட்டாய PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 

சமீபத்திய செய்திகள்