2020இன் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் 10ஆம் திகதி !

6 months ago

moon eclipse

இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் 10ஆம் திகதி நிகழவுள்ளது.

ஓநாய் சந்திர கிரகணம் என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திர கிரகணம் பகுதியளவிலேயே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி இரவு 10.38 முதல் 11ஆம் திகதி அதிகாலை 2.42 வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் ஜுன் 5, ஜுலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய திகதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன.

அத்துடன், 4 சூரிய கிரகணங்கள், 1 வளைய சூரிய கிரகணம் மற்றும் 1 பூரண சூரிய கிரகணம் ஆகியவையும் இந்த வருடம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்