மேலும் பல சீர்திருத்தங்கள்: நிர்மலா அறிவிப்பு

7 months ago

Tamil_News_large_2425578

மத்திய அரசு மேலும் பல சீர்திருத்த திட்டங்களை அறிவிக்க இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெறும் இந்தியா - ஸ்வீடன் வணிக மாநாட்டில் பங்கேற்று அவர் கூறியதாவது: முதலீட்டை அதிகளவில் ஈர்ப்பதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது. முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கார்ப்பரேட் வரியை குறைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு, வங்கி, சுரங்கம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்காக, இந்தியா திட்டமிட்டு வருகிறது.
மேலும் தேவையை அதிகரிப்பதற்காக, தனிநபர் வருமான வரி குறித்து, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரிச்சலுகைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகள்