பாக்.,குக்கு எதிரான போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு

9 months ago

Tamil_News_large_2430341

 பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,குக்கு எதிராக, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில், அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும். காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சமீபத்திய செய்திகள்