ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை இலங்கையில் நியமிக்க வேண்டும்-ஜெனீவாவில் கருணாஸ் வலியுறுத்து

1 year ago

72AA5CC9-C42D-4250-B76A-CEAF20F7C811

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலைமை கண்டறிய, இலங்கைக்கு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென தமிழக சட்டமன்ற உறுப்பினர் சே.கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே சே.கருணாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மற்றும் மனித நேயச் சிக்கல்கள் ஆகியவற்றை கண்காணித்து ஆறு மாதத்துக்கொருமுறை அறிக்கையை சமர்ப்பிக்க சிறப்பு நிபுணரை நியமிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு என்பவற்றின் உடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியுமென சே.கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்