ஒரே சூலில் 3 குழந்தைகள்

4 days ago

triplets

ஒரே சூலில் 3 குழந்தைகளை இலங்கைப் பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

அம்பாறை –  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  பிரசவம் இடம்பெற்றது.

28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரவச வலி என தெரிவித்து நேற்று  குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

தற்போது குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

3ஆண் குழந்தைகளும் தலா 1800 கிராம், 2190 கிராம், 2240 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னரும் கடந்த மாதம் இதே வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூர் பெண்  பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 

சமீபத்திய செய்திகள்