டில்லியிலும் குடிமக்கள் பதிவேடு: பா.ஜ., கோரிக்கை

5 months ago

Tamil_News_large_2356752

 டில்லியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால், அங்கு, தங்கியிருக்கும் சட்டவிரோத அகதிகளை கண்டுபிடிக்க, அசாமில் நடத்தப்பட்டது போல், குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது அவசியம் என பா.ஜ., கூறியுள்ளது.

இது தொடர்பாக டில்லி மாநில பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், டில்லியில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இதனால், அங்கு குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிப்பது அவசியம். இங்கு தங்கியுள்ள சட்டவிரோத அகதிகள் ஆபத்தானவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுப்போம்.எனக்கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மகளிர் காங்கிரஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:மனோஜ் திவாரி,பீஹாரின் கைமூரில் பிறந்தார்.உ.பி.,யின் வாரணாசியில் படித்தார்.மஹாராஷ்டிராவின் மும்பையில் வேலைபார்த்தார்.உ.பி.,யின் கோரக்பூரில் போட்டியிட்டார்.டில்லியில் மீண்டும் போட்டியிட்டார்.ஆனால், டில்லியில் தங்கியுள்ள அகதிகளை அகற்ற வேண்டும் எனக்கூறுகிறார் எனக்கூறியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்