பிபோனச்சி (Fibonacci), இது உங்கள் வாழ்க்கையையும் மாற்றும் ஒரு அதிசயம்.

11 months ago

8e92b8a8c47bcb8e072ea4ce32be3ab8

வாழ்க்கையே ஒரு கணக்குத் தான் என்று பலமுறை பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது நான் சொல்ல உள்ள அதிசயத்தைக் கேட்டால் உடனடியாக நீங்கள் அனைவரும் ஓடிச் சென்று ஒரு கணக்கு ஆசிரியரிடம் உடனடியாகக் கணக்கு கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.


நாளை என்ன நடக்கவுள்ளது, Lottoவில் என்ன இலக்கம் விழும், பங்க்குச் சாந்தை ஏறுமா ஏறாதா? என்று மட்டும் இல்லை, உங்கள் காதல்த் துணைக்கு உங்கள் மீது வெறுப்பா? வெறுக்கின்ற உங்கள் காதல் துணையைக் கூட உங்கள் விரும்ப வைக்க முடியும். மற்றவர்கள் முன் நீங்க கெத்த இருக்கவும் இந்தக் கணிதம் உதவுகின்றது என்றால் பிறகென்ன தாமதம். உடனடியாக ஆசிரியரைத் தேட வேண்டியது தானே என்று யோசிக்கும் உங்களுக்கு இதோ இந்த அரிய தகவல்.


பிபோனச்சி(Fibonacci) கோட்பாட்டில்தான் இந்த உலகமே உருவாகியுள்ளது என்று 1300 வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதற்க்கு முன்பே ஒரு சில நாகரியங்களில் இது கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு கிரேக்க கட்டிடங்களின் அமைப்பில் இந்த பிபோனாச்சி(Fibonacci)பயன்படுத்தப் பட்டுள்ளதாம்.  அதனாலேயே பிபோனச்சி(Fibonacci) இலக்கத்தின் தங்க விதத்தை பை () என்ற கிரேக்க எழுத்தின் குறியீட்டில் குறிக்கின்றனர். இதை எல்லாம் கேட்க்கும் உங்களுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியாமல் உள்ளதா? வாருங்கள் நான் விளக்கமாகச் சொல்லுகின்றேன். இந்த உலகில் உயிர் உருவாகும் வடிவம் ஒரு வளைந்த வட்டமும் இல்லாமல் நீள் வட்டமும் இல்லாமல் ஒரு கோணல் வடிவில் அல்லவா இருக்கும். கருவறையில் இருக்கும் குழந்தையைக் கற்பனை செய்யுங்கள்.இதன் வடிவும் உங்களுக்குப் புரியும்.


இதே வடிவில் தான் இந்த உலகம் உண்டு விண்வெளி உண்டு, பால்வெளி உண்டு பிரபஞ்சம் உண்டு ஏன் உங்கள் அருகில் உள்ள தாவரங்கள் விலங்குகள் பறவைகள் என்று உங்கள் கண் காது மூக்கு வரை அனைத்தும் இந்த வடிவில் தான் அமைந்துள்ளதால். அதுவும் முழுமையான பிபோனச்சி (Fibonacci)  இலக்க தங்க விகித அமைப்பில் உங்கள் உடல் அமைந்திருந்தால் நீங்கள் தான் கடவுள் என்று சொல்லப் படுகின்றது. நீங்கள் இருக்கும் இடத்தில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பீர்களாம். அதற்க்கு உதாரணம் இப்போது இருக்கும் அமெரிக்க ஜனதிபதியின் காது முதல் ஆப்பிள், facebook, twitter என்று அனைத்து உருவங்களும் இந்த தங்க விகித்தில் அமைந்திருக்கின்றது என்று ஆதாரம் கொடுக்கப் பட்டுள்ளது.

Fibonacci Golden Ratio


இப்போது என்னடா இது பிபோனச்சி(Fibonacci) என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அது வேறு ஒன்றுமில்லை 1 இல் ஆரம்பமாகின்றது, 1,1,2,3,5,8,13,21,34,55,89,144,233,377,610.......
இப்படி செல்லும் இலக்க ஒழுங்கைத் தான் பிபோனாச்சி என்று செல்கின்றார்கள். இந்த இலக்க ஒழுங்கில் உள்ள புதுமை என்ன என்றால், முதலில் 1 இரண்டாவதாக 1+0=1, (எப்படி என்றால் 1ஐயும் அதற்க்கு முன்னுள்ள 0ஐயும் கூடுதல்) அதே போன்று 1+1=2(வந்த விடை 1ஐயும் அதற்க்கு முன்னுள்ள 1ஐயும் கூட்டுதல்.) வந்த விடை 2ஐயும் அதற்க்கு முன்னுள்ள 1ஐயும் கூட்டுதல் 2+1=3, 3+2=5, 5+3=8 இப்படியே ஒவ்வொன்றையும் கூட்டி வரும் இயக்கத்தின் தொடரே பிபோனச்சி இலக்கம் என்று சொல்லப் படுகின்றது.


இதில் எப்படி வட்டம் வரையலாம் என்றால் ஒரு சதுர அடி கொண்ட இரண்டு சதுரத்தை அருகருகே வரைகின்றனர். இரண்டையும் இணைக்கும் வகையில், 2 சதுர அடி சதுரத்தைக் பக்கத்தில் வரைகின்றனர் அது ஒரு செவ்வகமாக மாறுகின்றது. இப்போது உள்ள செவ்வகத்தை இணைத்து 3 சதுரஅடி சதுரத்தை வரைகின்றனர். வரும் செவ்வத்தை இணைக்கும் வகையில் 5 சதுர அடி சதுரத்தை வரைகின்றனர் இவ்வாறே 8 சதுர அடி 13 சதுரடி என்று தொடர்ச்சியாக இந்த பிபோனச்சி இலக்கத்தில் சதுரத்தை வரைந்து இவ்வை சந்துக்கும் அந்தப் புள்ளிகளை இணைக்கும் வகையில் ஒரு கோட்டை வரைய முனைகின்றனர் அந்த கொடு ஒரு வளைந்த கோடாக வருகின்றது. இந்த வளைவு அக்கோடானது இந்த இயற்கையின் வளைவை அப்படியே பிரதி பலிக்கின்றது.


ஆகவே இந்த வளைவு வரும் வகையில் உங்கள் உடலமைப்பு இருந்தாலோ, அல்லது நீங்கள் செய்யும் செயல்களில் கவனியுங்கள் இந்த இயக்கத்தின் தொடர் எங்காவது தென்பட்டாலோ அதன் வடிவமைப்பைக் கண்டுபிடித்தாலோ? நீங்கள் தான் ராஜ உங்களால் இந்த உலகையே ஆளமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் எம்முடைய முன்னோர்கள் பிறந்த குழந்தைக்கு மூக்குப் பிடிப்பது, செவியிழுப்பது என்று, முகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வார்கள். இப்போது அந்த வழக்கம் எல்லாம் அருகிப் போய்விட்டது. அடுத்த தொடரில் அதை பற்றி விரிவாக எழுதவுள்ளேன். வாசித்துப் பயனடையவும்.

சமீபத்திய செய்திகள்