மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம்

8 months ago

Tamil_News_large_2419525

டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதையடுத்து டில்லிவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (நவ.,25) நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியது,
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டில்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் தெரிவிப்பதை பார்க்கும் போது காற்று மாசை கட்டுப்படுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், டில்லி அரசும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பேசாமல் வெடிகுண்டு வைத்து ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம்.

மத்திய அரசும், டில்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக கலந்து பேசி, டில்லியில் காற்று சுத்தப்படுத்தும் கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாள்களில் தாக்கல் செய்ய வேண்டும். தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? இது தொடர்பாக இரு அரசுகளும் 6 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 

சமீபத்திய செய்திகள்