பாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவடம்

5 months ago

imran-khan-1562-1578652305

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் போட்டுத்தள்ளியதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தை நடத்த உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்தப் பிரச்னை தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் கூறுகையில், ``கடந்த காலங்களில் மற்ற நாடுகளின் போர்களில் பங்கெடுத்து தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனால் அந்த தவறுகளை மீண்டும் செய்யப்போவதில்லை. பாகிஸ்தான் எந்தப் போரிலும் பங்குபெறப் போவதில்லை. இரு நாடுகளுக்கு இடையிலும் அமைதியைக் கொண்டுவர பாகிஸ்தான் முயற்சிகளை முன்னெடுக்கும்" என்றார்.

ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முடிந்தவரை முயற்சி செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், "சவுதி அரேபியா, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசுமாறு நான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை கேட்டுக்கொண்டுள்ளேன். பாகிஸ்தான் இந்த நாடுகளுடன் நட்புறவை மீட்டுக்க முயற்சி செய்யும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளதை அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்து இருக்கிறேன். போர்களில் இருந்து யாரும் வெற்றிபெறப் போவதில்லை. இப்போது, பாகிஸ்தான் போர்களை நடத்தாது. ஆனால், நாடுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யும்" என்றார். 

சமீபத்திய செய்திகள்