டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா

9 months ago

Tamil_News_large_2433164

: பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் சுவீடனை சேர்ந்த கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்துக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா தன்பர்க்கின் படத்தை இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுத்த டைம் இதழ், 'இளைஞர்களின் சக்தி' என அட்டையில் வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இதற்கு பலரும் தொடர்ந்து கிரேட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கிரேட்டாவிற்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், விமர்சித்துள்ளார். 

டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது அபத்தமானது. கிரேட்டா, தனது கோபத்தை கையாள்வது குறித்து செயலாற்ற வேண்டும். பின்னர், அவர் தனது நண்பருடன் இணைந்து நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள், என பதிவிட்டிருந்தார். டிரம்பின் இந்த பதிவிற்கு பலரும் விமர்சனத்தை பதிவிட்டாலும், கிரேட்டா, வேறு விதமாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பயோ என்னும் சுயவிவரத்தில் கிரேட்டா பதிவிட்டுள்ளதாவது: இளம்பருவப் பெண், தனது கோபத்தை கையாள்வது குறித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது, தனது நண்பருடன் நல்ல பழைய படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறாள், என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்