நிருபரின் மொபைலை பறித்த பிரிட்டன் பிரதமர்

9 months ago

Tamil_News_large_2431694

: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பேட்டியின் போது நிருபரின் மொபைலை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டனில் இன்று(டிச.,12) பார்லி., தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆளும் கட்சியான பழமைவாத கட்சிக்கும், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் பலத்த போட்டி இருக்கும். 'பிரக்ஸிட்' விவகாரம் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அப்போது ஜோ பைக் என்ற நிருபர், லண்டன் மருத்துவமனை ஒன்றில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தரையில் படுக்கவைக்கப்பட்ட புகைப்படத்தை, தனது மொபைலில் காட்டி கேள்விகளை எழுப்பினார்.

இதில் கோபமடைந்த பிரதமர், ஜோவின் மொபைலை பறித்து தனது கோட் பையில் வைத்துக் கொண்டார். இந்த வீடியோவை ஜோ, டுவிட்டரில் பகிர, அது வைரலானது. இச்சம்பவத்திற்கு எதிர்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்