முகமாலையில் கிடைத்த எலும்புக்கூடுகள்  விடுதலைப்புலி- பெண் போராளிகளுடையதா ?

4 days ago

srilanka skeleton

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்த பகுதியான கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு   இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று குறித்த பகுதியில் எலும்பு கூடுகளும்  அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அத்தோடு  விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும்  அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூடுகள்  விடுதலைப்புலி- பெண் போராளிகளாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், இது தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
 

சமீபத்திய செய்திகள்