சட்டசபை தேர்தல்: பா.ஜ., பொறுப்பாளர்கள் நியனம்

6 months ago

Tamil_News_large_2348315

:விரைவில் நடைபெற உள்ள சட்டபை தேர்தல்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமித்ஷாஇது குறித்து அரியானா மாநில பா.ஜ., செயலாளர் அனில் ஜெயின் கூறியதாவது:
இந்தாண்டு இறுதியில் அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த மாநிலங்களில் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்படி டில்லி மற்றும் அரியானா மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திரசிங் தோமர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பா.ஜ.,வின் பொது செயலாளர் பூபேந்தர் யாதவ் , மற்றும் துணை தலைவர் ஓம் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மூன்று மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்