ராஜபக்க்ஷவும் ஹிட்லர் ஆட்சியும் !

4 months ago

sujeewa sena

நாட்டில் ராஜபக்ஷ அரசாங்கம் வந்ததன் பின்பு ஏனையவர்கள் தலைநிமிர்ந்து செல்லகூடாது என்ற ஹிட்லர் போலவே ஆட்சியை கொண்டு செலுத்த முனைந்தனர் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்தவே இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளர் ஊடாக கைப்பற்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம்’ என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மகிந்த ராஜபக்ஷவிடம் காணப்படுவது இன பேதம் மாத்திரமே. நாட்டில் யுத்தம் முடிந்த பின்பு மக்களின் மனதில் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மீது ஆதரவாக இருப்பதைப்போல் எவ்வளவு பொய் கூற முடியுமோ அவ்வளவு பொய்களை கூறியுள்ளார்.

இவ்வாறு பொய் கூறிய பொய்யான ஆதரவினை வெளிப்படுத்தும் மகிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் மலையக மக்களையும் ஆதரவு காட்டி ஏமாற்றியும் உள்ளார். அவர்களின் நோக்கம் இந்த நாடு ராஜபக்ஷக்களின் நாடு என்பதை காட்டிக்கொண்டு ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சிகளை கொண்டு செல்வதே ஆகும். இதனையே அவர்கள் அதிகமாக விரும்புவதை காணக்கூடியதாக இருந்தது.

இந்த நாட்டில் ராஜபக்ஷ அரசு வந்ததன் பின்பு ஏனையவர்கள் தலைநிமிர்ந்து செல்லகூடாது என்ற ஹிட்லர் போலவே ஆட்சியை கொண்டு செலுத்த இவர்கள் முனைந்தனர். இதனை கட்டுப்படுத்தவே இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளர் ஊடாக கைப்பற்றியது. இன்று மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. அதில் சஜித் பிரேமதாச போட்டியிடுகின்றார். இவர் நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெற்ற நல்ல குடும்பத்தை சேர்ந்தவர். இவரை வெற்றியடைய செய்வதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்