வாக்குச்சாவடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்., வேட்பாளர்

5 months ago

Tamil_News_large_2423444

ஜார்க்கண்டில் முதற்கட்டமாக இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின் போது காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்டின் கோஷியாரா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி - பாஜக வேட்பாளர் அலோக் சவ்ராசியா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு சென்ற திரிபாதி, பாஜக ஆதரவாளர்களை வாக்குச்சாவடியினுள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. இதனால், பாஜக - காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால், பாஜக தொண்டர்களை சுட்டுவிடுவேன் என திரிபாதி மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேஷ் சவ்ராசியா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டார். திரிபாதியின் வசம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்றார்.

 

சமீபத்திய செய்திகள்