வல்வெட்டித்துறை கொள்ளையர்கள் கைது !

4 days ago

hand cuff

வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 

கொள்ளையர்கள் மூவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர்களிடமிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகள்  மீட்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையிலேயே திருட்டு மற்றும்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளையர்களிடமிருந்து  கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்  திருட்டு மற்றும்  கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் அவை தொடர்பில்  முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

அண்மையில் ஹெரோயின் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட  இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து  மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 

7 கொள்ளைச் சம்பவங்களுடன் குறித்த மூவரும் தொடர்பு பட்டிருந்தமை அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

விசாரணைகளின்  பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் நால்வரும்  முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்