வாசனையை வைத்தே எடைபோடும் யானைகள்

11 months ago

19SCI-TAKE-videoSixteenByNine3000

உணவின் அளவை கண்ணால் பார்த்தே, இரையின் தன்மையை முடிவு செய்வதில் பாலுாட்டிகளும், பறவைகளும் கில்லாடிகள். ஆனால், உணவின் அளவை அளக்க யானைகள் நுகரும் திறனைப் பயன்படுத்துகின்றன என்பதை அண்மையில், விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

ஆசிய யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பது தெரிந்தது தான். இருந்தாலும், அந்த மோப்ப சக்தியை வைத்து தங்களுக்கு முன் உள்ள உணவுக் குவியலில், எது அதிக எடை உள்ளது என்பதையும் அவற்றால் கண்டறிய முடியும் என்பது ஆச்சரியமான திறன் தான்.

சோதனைகளின் போது, யானைகளின் கண்களுக்கு தெரியாமல், இரண்டு சூரியகாந்தி விதைக் குவியல்களை விஞ்ஞானிகள் வைத்தனர்.அவற்றின் வாசனையை வைத்தே, விதைகள் அதிகமாக உள்ள குவியலை ஆசிய யானைகள் சரியாக தேர்ந்தெடுத்து அசத்தின. நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வின் அடுத்த கட்டமாக, வாசனையால் உணவின் அளவை எப்படி அவை எடை போடுகின்றன என்பதை ஆராய உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்