கவலைக்குரிய பொருளாதாரம்: மன்மோகன்சிங்

5 months ago

Tamil_News_large_2422566

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமையை விட சமூகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தி புள்ளிவிவரங்கள்4.5 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக வளர வேண்டும். பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது.

பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

 

சமீபத்திய செய்திகள்