ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீ!டு

9 months ago

Tamil_News_large_2433153

 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்து, 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வெளியான இந்த பட்டியலில், தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் இ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் வெளியிட்டனர்.

 

சமீபத்திய செய்திகள்