சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சிக்கும்வரும் நோக்கத்துடன் அரசு - சிவகரன் குற்றச்சாட்டு

4 days ago

sivaharan

இலங்கை அரசு  சிங்கள வாக்குகளை தன்னகப்படுத்தும் நோக்கை முதன்மையாகக்கொண்டே  வடக்கின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2019 மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அவர், அது தொடர்பில்  மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறியபோது  இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்.

குறித்த மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இவ்விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியம் என்ன ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்  பெற்று சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சிக்கும் வரும் வகையில் பல செயற்பாடுகளை இலங்கை   அரசு  முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்