பாக்.,கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

1 year ago

gallerye_143711737_2214272

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வாரணாசியில் பாகிஸ்தான் அரசை கண்டித்தும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். பாக்., தேசிய கொடி மற்றும் பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 
காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளூர் மக்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பாக்.,க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சாலையில் அமர்ந்து போராடிய அவர்கள், பாக்.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தராபாத்தில் தெலுங்கானா ஐகோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

சமீபத்திய செய்திகள்